ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா 2019-ம் ஆண்டுக்கான மோட்டர் பந்தய இலக்குகளை அறிவித்திருக்கிறது!

  • ஹோண்டாவின் 4 இந்திய மோட்டர் பந்தய வீரர்கள் சர்வதேச மோட்டர் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் கனவை நிறைவேற்ற பங்குப்பெற இருக்கிறார்கள்.
  • ’ஆசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் – 2019’ [2019 Asia Road Racing Championship]-ல் இந்தியாவின் தனி கள பங்கேற்பை வலுப்படுத்த ‘இடெமிட்சு ஹோண்டா ரேசிங் இந்தியா’ [IDEMITSU Honda Racing India] கவனம் செலுத்தும்.
  • 2019 ஏஆர்.ஆர்.சி. பந்தய வீரர்கள் – அனுபவம் வாய்ந்த ராஜீவ் சேது மற்றும் ரூகி செந்தில்குமார் ஆகிய இருவரும் ஏபி250-ல் பங்கேற்கிறார்கள்.
  • 2018- ஆண்டு ஹோண்டா டேலண்ட் ஹண்ட் ரைடர்களாக தேர்ச்சி பெற்றவர்களை ஆசிய அளவில் பங்குப்பெற செய்வதற்கான தொழில்ரீதியான வளர்ச்சியை ஹோண்டா உத்வேகப்படுத்தி இருக்கிறது.
  • தாய்லாந்து டேலண்ட் கப் 2019 போட்டியில் பங்குப்பெறும் இந்திய டீன் ஏஜ் ரைடர்கள் – 14 வயது மொஹமட் மிகெய்ல் மற்றும் 18 வயது ஹிரிதிக் ஹபிப்.
  • ஹோண்டா 2வீலர்ஸ், உலக அளவிலான முன்னணி மோட்டர் ரேசிங் போட்டிகளில் இந்தியாவை பங்குப்பெற செய்வதோடு, இந்தியா உள்ளிட்ட ’ஆசியா ஓஷினியா’  [Asia Oceania]   பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனங்கள் உலகளவிலான போட்டிகளில் ஆசியாவின் தாக்கத்தை உருவாக்க கைக்கொடுக்கும்.
  • பெரும் நம்பிக்கையளிக்கும் ஆசியாவின் நட்சத்திர மோட்டர் பந்தய வீர்ர்கள் 4 பேர், 2019-ம் ஆண்டின் மோடோஜிபி சீசனில் மோட்டோ2, மோட்டோ3 பிரிவில் பங்கேற்கிறார்கள்.
  • உலகத்தர மோட்டர் பந்தய வீரர்களை உருவாக்கும் இலக்கை கொண்டிருக்கும் ஹோண்டா 2 வீலர்ஸ் அதை செயல்படுத்தும் வகையில், ஷோவா அணியுடன் [SHOWA team] இந்திய மோட்டர் பந்தய வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
  • இந்த அணி, புகழ்பெற்ற கெளரவமிக்க அனைத்து ஜப்பான் ரோடு ரேசிங்களிலும் போட்டியிட இருக்கிறது. குறிப்பாக, சுஸூகா 8 மணிநேர  எண்டியூரன்ஸ் ரேஸ்  [Suzuka 8 Hour Endurance Race], 2019-ம் ஆண்டின் ஆசியா ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப் போட்டியில் ஏஎஸ்பி1000 பிரிவிலும் [ASB1000]  கலந்து கொள்ள இருக்கிறது.

சென்னை, 1 மார்ச் 2019 – இந்தியாவில் இருந்து உலகத்தர மோட்டர் பந்தய வீரர்களையும், மோட்டர் பந்தயக்குழு தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கும் நோக்கில், உத்வேகத்துடன் களமிறங்கி இருக்கும் ஹோண்டா மோட்டர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட், 2019-ம் ஆண்டு சீசனுக்கான தனது சர்வதேச மோட்டர் பந்தய அணியை அறிவித்திருக்கிறது.

2019-ம் ஆண்டில், ‘இந்தியாவில் இருந்து தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான சேம்பியன்ஷிப்களுக்கு நட்சத்திர மோட்டர் பந்தய வீரரை உருவாக்குவது’ என்ற தனது நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3 விதமான அணுகுமுறைகளுடன் தீவிரம் காட்டி வருகிறது ஹோண்டா.

சர்வதேச அளவில் போட்டியிட்டு வாகை சூடும் திறமை கொண்ட மோட்டர் பந்தய வீரர்களை இந்தியாவில் அடையாளம் காண, ஹோண்டா மேற்கொண்டிருக்கும் 2019-ம் ஆண்டு திட்டங்கள் குறித்து ஹோண்டா மோட்டர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ப்ராண்ட் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் துணைத்தலைவர் திரு. பிரபு நாகராஜ் [Mr. Prabhu Nagaraj, Vice President – Brand and Communications, Honda Motorcycle & Scooter India Pvt. Ltd.] கூறுகையில், ‘’சவால்களை எதிர்கொண்டு உத்வேகம், வெற்றிப்பெறும் ஆர்வம் இவை இரண்டும் ஹோண்டாவை முன்னிறுத்துகின்றன. மக்கள் எங்களிடம் மிக அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதை நாங்களும் அறிந்திருக்கிறோம். அவர்களது எதிர்பார்புகளை நிறைவேற்ற நாங்கள் ஒரு குழுவாக, வெற்றிகளைக் குவிக்க மிக கடினமாக உழைக்கிறோம். பெரும் நம்பிக்கை அளிக்கும் இந்தியாவின்  2 மோட்டர்பந்தய வீரர்கள், ஆசிய அளவிலான இடெமிட்சு ஹோண்டா ரேசிங் இந்தியா சார்பாக போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில் டாப் க்ரூப்பில் நம்முடைய ரைடர்கள் இடம்பிடிப்பார்கள். 2019-ம் ஆண்டுக்கான சர்வதேச மோட்டர் பந்தய அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

கடந்த வருடம், மோட்டர் ஸ்போர்ட் குறித்த எங்களது இலக்கை கூறினோம். இந்த ஆண்டு, எங்களது இலக்கை அடையும் முயற்சியில் முழு அக்கறையுடன் ஈடுப்பட்டு வருகிறோம். ஆசிய அளவிலான பந்தயங்களுக்கு 2 அடுத்த தலைமுறை மோட்டர் பந்தயவீரர்களை உத்வேகத்துடன் தயார் படுத்தி வருகிறோம். ‘இடெமிட்சு ஹோண்டா இந்தியா டேலண்ட் ஹண்ட்’ மூலம் 13 வயதுடைய இளம் திறமையாளர்களை, மோட்டர் பந்தயத்தில் உச்சம் தொடும் வாய்ப்புகளுள்ள இளைய தலைமுறையினரை அடையாளம் கண்டு வருகிறோம். மோட்டோஜிபி-க்கான இந்திய மோட்டர் பந்தய வீரராக இவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அந்த வகையில், இளம் இந்திய மோட்டர் பந்தய வீரர்கள் தங்களது கனவுகளை நிஜமாக்க, ஹோண்டா அட்டகாசமான ஊக்குவிப்பு திட்டங்களுடன் கைக்கொடுக்க காத்திருக்கிறது.

ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியாவின் அணி இடெமிட்சு ஹோண்டா ரேசிங் இந்தியா ஆசியா ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப் மற்றும் தாய்லாந்து டேலண்ட் கப் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்கிறது. Honda 2Wheelers India’s team IDEMITSU Honda Racing India at ARRC & TTC:

ஆசியா ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப் Asia Road Racing Championship (ARRC)  – கடந்த 24 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் ஆசியாவின்  மிகவும் கடினமான சாலை பந்தய சேம்பியன்ஷிப் போட்டியாகும். 2019-ம் ஆண்டுக்கான சீசனில், ஆசிய தயாரிப்பு 250சிசி பிரிவில் முன்னணி ஆசிய மோட்டர் பந்தய வீரர்களுக்கு கடும்போட்டியை அளிக்கும் தனிநபர் இந்திய அணியான இடெமிட்சு ஹோண்டா ரேசிங் இந்தியா உருவெடுத்து இருக்கிறது.

கடும்போட்டி நிலவும் இப்பிரிவில் அனுபவம் வாய்ந்த ராஜீவ் சேது கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு, ஆசியா ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப்பில் இவருக்கு மூன்றாவது சீசனாகும். 2017-ல் ஏஆர்ஆர்சி-யில் அறிமுகமானது முதலே, ராஜீவ் சேது தொடர்ந்து தனது திறமையில் மேம்பட்டு வந்திருக்கிறார். ஆரம்ப வருடத்தில் 46-வது வீர்ராக இடம்பிடித்தவர், 2018-ம் ஆண்டில் தனது திறமையின் காரணமாக இந்திய அணிக்கு பல புள்ளிகளைப் பெற்று தந்ததுடன் 27-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

     ராஜீவ் உடன் 17 வயது நம்பிக்கை நட்சத்திரம் ரூகி ரைடர் செந்தில் குமார் அணி உறுப்பினராக கைக்கோர்க்கிறார். 2018-ல் தாய்லாந்து டேலண்ட் கப் போட்டியில் செந்தில் அறிமுகமான போது, நம்பிக்கையளிக்கும் வகையில் போட்டிப் புள்ளிகளை பெற்றார். மேலும் 2018-ம் ஆண்டு ஐ.என்.எம்.ஆர்.சி ப்ரோ ஸ்டாக் 165 சிசி சேம்பியன்ஷிப்பில் [INMRC Pro Stock 165cc championship] உள்நாட்டுப் பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிட்த்தக்கது.

     தனது நினைவுகளைப் பகிர்ந்து  கொண்ட ராஜீவ் சேது, ‘’ஏ.ஆர்.ஆர்.சி-யில் இது எனக்கு 3-வது ஆண்டு. இந்த மாபெரும் தளத்தை அமைத்து கொடுத்திருக்கும் ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியாவுக்கு என்னுடைய மனமார்ந்த பெரும் நன்றிகள். என்னுடைய கனவுகள் மெய்ப்படுவதை என்னால் உணர முடிகிறது. என்னுடைய திறமைகளை வளர்க்க, சர்வதேச சேம்பியன்ஷிப்களில் என் திறமையை நிரூபித்துக்காட்ட நான் கண்ட கனவு நிஜமாகி வருகிறது, ஒவ்வொரு சீசனின் போதும் எனது கனவுகளை இன்னும் அதிகம் நெருங்கி செல்கிறேன். 2019-ம் ஆண்டுக்கு நான் ஹோண்டாவின் மிகச்சிறந்த பயிற்சி திட்டங்களின்  கடுமையாக பயிற்சிகளுடன் தயாராகி இருக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு நானே சவால் விட்டு, இன்னும் பல இடம் முன்னேறி, இந்த சீசனில் டாப் 15 –ல் இடம்பிடிக்க விரும்புகிறேன்’’

     ஏ.ஆர்.ஆர்.சி-யில் அடியெடுத்து வைக்கும் செந்தில் குமார் கூறுகையில், ‘’தொழில்ரீதியாக என்னுடைய ரேசிங்கை ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில், ஹோண்டா மூலம் சர்வதேச வாய்ப்புகளை பெற்றிருப்பதை நினைத்துப் பார்க்கும் போது நான் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஆசியாவின் கடுமையான பந்தயங்களில் என்னுடைய முதல் அனுபவமாக ஏ.ஆர்.ஆர்.சி இருக்கும். சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பாக பங்கெடுக்க, இடெமிட்சு ஹோண்டா ரேசிங் டீமில் ஒருவனாக பங்கெடுப்பதில் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. தாய்லாந்து டேலண்ட் கப் போட்டிக்குப் பிறகு, கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு என்னுடைய கனவு வாய்ப்பாகும். இதற்காக நான் இரவுப்பகலாக கடுமையாக உழைத்திருக்கிறேன். என் நாட்டை பெருமைக்கொள்ள செய்ய கடுமையாக உழைக்கிறேன். டீம்ஹோண்டாவுடன் இணைந்து அதிகம் கற்றுகொள்ள உற்சாகமாக இருக்கிறேன்.’’ என்றார்.

தாய்லாந்து டேலண்ட் கப் -2019 போட்டிக்கான இடெமிட்சு ஹோண்டா இந்தியா டேலண்ட் ஹண்ட் [IDEMITSU Honda India Talent Hunt to Thailand Talent Cup (TTC) 2019]:

சர்வதேச அளவிலான மோட்டர் பந்தயப் போட்டிகளில், இந்திய நட்சத்திர மோட்டர் பந்தய வீரர்களை உருவாக்குவதில் இருக்கும் மிகப்பெரும் பிரச்னை, தொழில்ரீதியிலான ரேசிங்கில் அவர்கள் மிக தாமதாக நுழைவதுதான். இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு, திறமை அதிகமுள்ள இளம் இந்திய தலைமுறையினரை அடையாளம் கண்டு அவர்களது திறமையை ஊக்குவிக்கும் மேம்பாட்டு பயிற்சிகளை ஹோண்டா அளித்து வருகிறது.

இதற்கென ஒரு தனித்துவமான தளமாக, 2018-ல் இடெமிட்சு ஹோண்டா இந்தியா டேலண்ட் ஹண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தியாவில் இதற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹோண்டாவின் சிறப்பு நிபுணர்களைக் கொண்ட அணி, இந்த அடையாளம் காணும் போட்டியில் 7 மாநிலங்களின் 21 நகரங்களில் இருந்து கலந்து கொண்ட 132 இளம் மோட்டர் பந்தய திறன் கொண்டவர்களில் அதிக திறமையுள்ள டாப் 12 பேரை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

        2019-ம் ஆண்டு தாய்லாந்து டேலண்ட் கப் சீசனுக்கான இந்த புதிய ரைடர்கள் குழுவில்  சென்னையைச் சேர்ந்த 14 வயது மொஹமெட் மிகெய்ல் மற்றும் கர்நாடகாவின் கடாக் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஹிரிதிக் ஹபிப் ஆகிய இருவரும் இடம்பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டு இடெமிட்சு ஹோண்டா இந்தியா டேலண்ட் கப் போட்டியில் முன்னணி இடங்களைப் பிடித்திருக்கும் இவர்கள், ஹோண்டாவின் முக்கிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு திட்டமான ’ஏஷியன் ரைடர் டெவலப்மெண்ட் ப்ரோக்ராம்’ [Asian rider development program] மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

     உலகத்தரத்திலான மோட்டர் பந்தய வீரரை மட்டும் உருவாக்காமல், மிகச்சிறந்த டெக்னீஷியனையும் உருவாக்க வேண்டுமென்ற நோக்கில், திரு. பி. பிரபாகரன் ஹோண்டா ஏஷியா ட்ரீம் ரைடிங் டீம் உடன் கைக்கோர்த்திருக்கிறார். இதன் மூலம் புதிய பிரிவான சூப்பர்பைக் 1000சிசி பிரிவில் [Superbike1000cc class (ASB1000)]  ஹோண்டா ஏஷியா ட்ரீம் ரைடிங் டீம் டெக்னிக்கல் டீம் போட்டியில் களமிறங்கும்.

எஃப்.ஐ.எம். ஆசியா ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப் 2019  [2019 FIM Asia Road Racing Championship]

     1996 முதல், ஆசியாவின் மிகக் கடுமையான மோட்டர்சைக்கிள் ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப்பாக திகழும் எஃப்.ஐ.எம். ஆசியா ரோடு ரேசிங் சேம்பியன்ஷிப்பின் 24-வது எடிஷன் நடைப்பெற இருக்கிறது. 2019-ம் ஆண்டு சீசன் போட்டிகள் 5 நாடுகளில் [மலேஷியா -2, ஆஸ்திரேலியா, தாய்லாந்து – 2 மற்றும் ஜப்பான் & தென்கொரியா] நடைபெறும் மொத்தம் 7 சுற்றுகளைக் கொண்டது. இப்போட்டிகள் 8- ம் தேதி மார்ச் 2019 முதல் இறுதிச்சுற்று டிசம்பர் 2019 வரை நடைபெற இருக்கின்றன. ஏ.ஆர்.ஆர்.சி போட்டியானது, சூப்பர் ஸ்போர்ட் வேர்ல்ட் சேம்பியன்ஷிப் போன்று உற்பத்தி அடிப்படையிலான ரேசிங்கின் ஒரு பகுதியாகும். இந்தாண்டு சேம்பியன்ஷிப் 4 முக்கிய பிரிவுகளில் நடைபெறும். இதில் ஏற்கனவே இருக்கும் சூப்பர்ஸ்போர்ட்ஸ் 600சிசி, ஏஷியா ப்ரொடக்‌ஷன் 250ச்ச் மற்றும் அண்டர்போன் 150சிசி ஆகிய மூன்று பிரிவுகளுடன், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ’ப்ரீமியர் க்ளாஸ் ஆஃப் ஏஷியா சூப்பர் பைக் 1000’ பிரிவும் அடங்கும்.

< REFERENCE 1: Overview of Honda’s road racing teams and riders in 2019 >

  • IDEMITSU Honda Racing India team from INDIA for international racing
Championship (class) Machine Rider Age Nationality Career Highlights
FIM Asia Road Racing Championship (AP 250) CBR250RR Rajiv Sethu Nov, 1997 (21 yr) India 2018: – ARRC, AP 250 (27th) – Thailand Talent Cup (12th) – INMRC Super Sport 165 (2nd) 2017: – ARRC, AP 250 (46th) – Thailand Talent Cup (16th) – INMRC Super Sport 165 (2nd) – CBR 250R One Make Race (1st) 2016: – Honda Asia Dream Cup (12th)  – INMRC Pro Stock 165 (1st) – CBR 250R One Make Race (1st)
Senthil Kumar Feb, 2001 (18 yr) India 2018: – Thailand Talent Cup (20th) – INMRC Pro Stock 165 (3rd) –  IDEMITSU Honda Talent Cup CBR 250R (3rd) 2017: –  Debut in racing with Honda – CBR 150R One Make Championship (5th)
Thailand Talent Cup (NSF 250)   NSF250R Mohamed Mikail March, 2004 (14 yr) India 2018: – Debut in racing with Honda – IDEMITSU Honda Talent Hunt prodigy – IDEMITSU Honda Talent Cup CBR 150R (1st)
Kritik Habib March, 2000 (18 yr) India 2018: – Debut in racing with Honda – IDEMITSU Honda Talent Hunt prodigy – IDEMITSU Honda Talent Cup CBR 150R (3rd)

Exclusive teams for top Asian riders by Honda* including India

Championship (class) Team Machine Rider Age Nationality 2018 result
FIM Grand Prix World Championship (Moto2) IDEMITSU Honda Team Asia KALEX Dimas Ekky Pratama 26 Indonesia CEV Moto2 (5th)
Somkiat Chantra 20 Thailand CEV Moto3 (9th)
FIM Grand Prix World Championship (Moto3) Honda Team Asia NSF250RW Kaito Toba 18 Japan Moto 3 (22nd)
Ai Ogura 17 Japan CEVMoto3 (5th)
All Japan Road Race Championship (JSB 1000) Honda Asia Dream Riding Team* CBR1000RR SP Zaghwan Zaidi 23 Malaysia JSB 1000 (17th)
Suzuka 8 Hour Endurance Race CBR1000RR SP Suzuka 8 hr (7th)
FIM Asia Road Racing Championship / ARRC (ASB 1000) CBR1000RR SP  –

* Collectively by all Honda 2Wheeler companies in Asia and Oceania region including India (HMSI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *