மு.க.ஸ்டாலின் தான் சிறந்த தலைவர்: செந்தில் பாலாஜி!s

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஸ்டாலின் தான் சிறந்த தலைவர் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், தொண்டர்களை அரவணைத்து செல்லக்கூடியவர் தான் உண்மையான தலைவர். அந்த வகையில், சிறந்த தலைவரக திகழும் தளபதி மு.க.ஸ்டாலினின் ஈர்ப்பால் இன்று திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

Also Read This: மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி!

Senthil Balaji Join DMK

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி!

இதுவரை எனது மனதில் இருந்த இருளை நீக்கி ஒளி பெறச் செய்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தொண்டாற்றினேன். ஆனால், இப்போது அங்கிருந்து வந்து திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன்.

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக்கொண்டேன். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இணைகின்றனர். தமிழகத்தில் ஆட்சி செய்யும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி மக்களின் எண்ணங்களுக்கு எதிராக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடிபணிந்து செயலாற்றி வருகிறது.

உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி

இது மக்களின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் விரோதமாக உள்ளது. தமிழர்களின் உரிமைக்காக போராடக்கூடியவர் தான் ஸ்டாலின். அதனால், நானும், அவருடன் இணைந்து மக்களின் உரிமைக்காக பாடுபட திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *