மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்

மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை இளைய சன்னிதானமாக அறிவித்தார்.

இந்நிலையில் புதிய இளைய ஆதீனத்தை மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ தொண்டாற்றியுள்ளார்.

அதீன மடத்தின் சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/madurai-aadhinam-s-junior-aadhinam-appointed-353439.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *