CII Conclave on Advancements in Healthcare and its Impacts

உடல் நலம் மற்றும் அதன் தாக்கங்களில் தற்போதைய  முன்னேற்றங்கள் பற்றிய மாபெரும் சிறப்பு கருத்தரங்கு

மற்றும்

இதய நோய், புற்றுநோய் மற்றும் எலும்பியல் நோய் குறித்த சிஐஐ தமிழ்நாடு சுகாதார கருத்து பரிமாற்ற தளம் ஆரம்பம்!

11 மார்ச் 2019: சென்னை

பத்திரிகை செய்தி

‘கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி’  [Confederation of Indian Industry, CII]  என்றழைக்கப்படும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு, 9 மார்ச், 2012 அன்று உடல் நலம் மற்றும் அதன் தாக்கங்களில் தற்போதைய முன்னேற்றங்கள் பற்றிய மாபெரும் சிறப்பு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில், ஆர்த்தோபீடிக்ஸ்,ஆன்காலஜி மற்றும் கார்டியாலஜி பற்றிய குழு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த கருத்தரங்கின்  மதிப்பீட்டாளராக,ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லய்ட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைமை இயக்க அலுவலர், டாக்டர் எஸ். பிரகாஷ் [Dr. S. Prakash, Chief Operating Officer, Star Health and Allied Insurance Co. Ltd]. முன்னின்று நடத்தினார். டாக்டர் எஸ். முத்துகுமார், நிறுவனர்- பார்வதி மருத்துவமனை, டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் – காவேரி மருத்துவமனை, டி.எஸ். அசோகன், இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி – ஜெம். மருத்துவமனைகள் [Dr. S. Muthukumar, Founder,  Parvathy Hospital, Dr. Aravindan Selvaraj, Executive Director & Chief Orthopedics Surgeon, Kauvery Hospital, D. S. Asokan, Director and CEO GEM Hospitals] ஆகியோர் எலும்பியல் நோய்கள்  [orthopedics.]பற்றிய விவாதத்தில் பங்கேற்றனர். டாக்டர் சி. பழனிவேலு,  சேர்மன் – ஜெம் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர், டாக்டர் பேராசிரியர் எஸ். சுப்பிரமணியன், நிறுவனர் / தலைவர் – வி.எஸ். ஹாஸ்பிடல் மற்றும் திரு. ராகவா ராவ் நிர்வாக இயக்குனர் கேமோமிலி ஹெல்த் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் [Dr. C. Palanivelu Chairman, GEM Hospital and Research Centre, Dr. Prof. S. Subramanian, Founder/ Chairman VS Hospital and Mr. Raghava Rao Executive Director Camomile Healthcare Ventures Pvt Ltd]ஆகியோர் புற்றுநோய் [Oncology] தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். டாக்டர் சாய் சதீஷ், அப்போலோ மருத்துவமனை, திரு. சந்திரசேகர் ஜெய்மன், கண்ட்ரி சேல்ஸ் மேனேஜர் -, நுண் வடிகுழாய் சார்ந்த சிகிச்சைகள் மெட்ரானிக், மற்றும் டாக்டர் மதுமதி. ஆர்,  மூத்த பொது மேலாளர் மருத்துவம் -ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் [Dr. Sai Satish Apollo Hospitals, Mr. Chandrashekar Jaiman, Country Sales Manager, Catheter based therapies Medtronic, and Dr. Madhumathi. R, Sr. General Manager Medical, Star Health Insurance] ஆகியோர் இதய நோய் [Cardiology] தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டார்.

மருத்துவமனைகளின் நலன்களுக்கான அறிவுசார் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தளத்தை இக்கருத்தரங்கு உருவாக்கி இருக்கிறது. இதில் மிகச்சிறப்பான தரன்மேலாண்மை முதல் மலிவான கட்டணத்திலான சிகிச்சைகள் மற்றும் சிறப்பான வாழ்க்கைத்தரத்திற்கு வழிவகுக்கும் நோயாளிகளின் மன திருப்தி போன்றவற்றில் உள்ளநுணுக்கங்களை, சாத்தியக்கூறுகளை அனைவரும் பயன்பெறும் வகையில் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஒவ்வொருவரு மருத்துவமனையும் தன்னுடைய செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். அதற்கு இக்கருத்தரங்கும், அறிவுசார் கருத்து பரிமாற்ற முயற்சிகளும் உதவும்.

இக்கருத்தரங்கின் போது, சிஐஐ தமிழ்நாடு உடல்நலக்குழுவானது [CII TN Healthcare Panel],  முதல் முறையாக எலும்பியல் கருத்து பரிமாற்ற தளம், புற்றுநோய் கருத்து பரிமாற்ற தளம் மற்றும் இதயநோய் கருத்து பரிமாற்ற தளம் [Orthopedics Forum, Oncology Forum & Cardiology Forum.] ஆகிய மூன்று ஃபோரம்களை தொடங்கி  வைத்தது. சிஐஐ டிஎன் ஃபோரம்-ன் நோக்கம், மருத்துவ ஆலோசகர்களுக்கான கலந்தாலோசனைகள், கருத்துக்கள் பரிமாற்றம், புதிய மருத்துவநடைமுறைகள், அனுபவங்கள், சமீபத்திய அறுவை சிகிச்சை நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றிய தகவல்களை, அனுபவத்தை பரிமாறிக் கொள்வதாகும். இது மருத்துவத்துறை நிபுணர்களின் திறன்களைமேம்படுத்த உதவுவதால், அதன் மூலம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். சிகிச்சையின் தரமும் மேம்பட உதவும்.

இந்த கருத்து பரிமாற்ற தளமானது, எலும்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், எலும்பியல் சிறப்பு மருத்துவர்கள், புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள்,  இதய நோய் சிகிச்சை மையங்கள், இதயநோய் நிபுணர்கள், உடல்நல காப்பீட்டு நிறுவனங்கள், மருந்தகங்கள், சிகிச்சைகளுக்கான உபகரண  உற்பத்தியாளர்கள் மற்றும் செயல்பாட்டு வல்லுநர்கள் என பலத்தரப்பட்டோரை ஒரே புள்ளியில் ஒருங்கிணைக்க உதவும் தளமாக அமையும். இதன் மூலம் இவர்களிடையே மருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், எலும்பியல் துறையில் உருவாகி வரும் மேம்பாடுகள், புற்றுநோய் மற்றும் இதயநோய் சிகிச்சைகளில் உண்டாகி வரும் மாற்றங்கள் குறித்தும், நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ளும் நெட்வொர்க்கையும்  உருவாக்க  முடியும். இந்த ஃபோரமின் உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை சந்தித்து, தங்களது கருத்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

      டாக்டர் சந்திரமோகன், தலைவர்சிஐஐ – தமிழ்நாடு [Dr Chandramohan, Chairman, CII] பேசுகையில்சிஐஐ, உடல்நலம் மற்றும் சுகாதார துறையை கொள்கைரீதியாக முன்வைத்தல் மற்றும் அனைவருக்குமான வாய்ப்புகளை கட்டமைத்தல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னேற்ற முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே சிஐஐ முதல் முறையாக, ‘மெடிக்கல் வேல்யூ ட்ராவெல் கன்சோர்டியம்’-ஐ  அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கன்சோர்டியத்தின் நோக்கம், தமிழ்நாடு, இந்தியாவில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்கள், ஆசியான் நாடுகள் மற்றும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார சேவையின் தரம் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதாகும்.’’ என்றார்.

      சிறப்புரையாற்றிய தமிழர் பேச்சாளர்கள் திருமதி பாரதி பாஸ்கர், மற்றும் திரு. எஸ். ராஜா ஆகிய இருவரும், ’காப்பீடு துறையும், மருத்துவமனைகளும் ஒன்றிணைந்து வருவது, ஒரு நல்ல மாற்றங்களை உருவாக்கும் முயற்சியாகும். மேலும் அவர்கள் இத்துறையில் உருவாகி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், உடல்நல சுகாதார துறையில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடுகளையும் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மேலும் அவர்களை கூறுகையில் மருத்துவர்கள் தங்களை தேடிவரும் நோயாளிகள் கூறுவதை பொறுமையுடன் கேட்டு, அதன் பின்னர் தேவையான சிகிச்சையளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

 டாக்டர் பிரகாஷ் கூறுகையில், ‘’மருத்துவ துறையில் இன்றைக்கு உருவாகி இருக்கும் முன்னேற்றங்கள், இதுவரையில்லாத உயர் முன்னேற்றங்களாகும். ஆனால் மருத்துவமனைகள் தங்களுக்கு எது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், மருத்துவ முன்னேற்றங்களைப் பின்பற்ற முனைகின்றன. அதனால், நாங்கள் மருத்துவ மேலாண்மையில் இருக்கும் கஷ்டங்களை, தடைகளை கடந்து மிகச்சரியான தொழில்நுட்பங்கள் மற்றும் முறைப்படி பின்பற்றவேண்டிய மருத்துவ நடைமுறைகளுக்கு எந்தவித தடையும் இல்லாமல் எப்படி  மாறுவது என்ற தலைப்புகளில் கையாண்டு இருக்கிறோம். இந்த முயற்சியின் நோக்கம், ஒரு சாதாரண மனிதனுக்கும் அதிநவீன, சிறப்பான மருத்துவ சிகிச்சைகளின் பலன் முழுமையாக கிடைக்கவேண்டும் என்பதே’’ என்றார்.

Photo Caption: Dr. S Prakash, COO, Star Health, Mr S Raja, Tamil Orator, Dr Chandramohan, Chairman, CII, Tamil Nadu and Ms Bharathy Baskar, Tamil Orator graced the occasion. 
Warm Regards
D.G.JAISHANKAR
ADFACTORS PR
94440-36340

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *