ஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளி முதலாவது ஆண்டை வெற்றிகரமாக கொண்டாடுகிறது!

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ. ஹெயவர்தன், கல்வியாளர் திருமதி நிர்மலா பிரசாத், விளையாட்டு வீராங்கனை  நியதி ராய் ஷா ஆகியோர் அர்காடியா என்ஐஒஎஸ்  பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்ஐஒஎஸ்

சென்னை, 14 மார்ச் 2019 – ஆர்காடியா என்ஐஒஎஸ், இந்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் தேசிய திறந்த பள்ளிக்கூட கல்வி அமைப்பின் கீழ் இயங்கிவரும் பள்ளியாகும். இப்பள்ளியின் முதலாம் ஆண்டு விழா மயிலாப்பூரில் இருக்கும் தக்‌ஷிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் [பிஎஸ் ஸ்கூல்] பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெ. ஜெயவர்தன்,  எம்.ஒ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின் முன்னாள் பிரின்ஸ்பல் திருமதி. நிர்மலா பிரசாத் மற்றும் பிரபல டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை நியதி ராய் ஷா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு, அங்குப் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், வாழ்க்கையில் உச்சம் தொட, சாதனைகள் நிகழ்த்த உத்வேகம் கொடுக்கும் உரை நிகழ்த்தினர்.

      ஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளி மாணவர்கள், பெரும் ஆர்வத்துடன் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். அதில் ‘பக்த ப்ரஹலாதா’ நடன நாடகம், தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள், குழு நடனம், புல்லாங்குழல் கச்சேரி என கலை மற்றும் கலாச்சார மதிப்பை கொண்டாடும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

      இவ்விழாவில் பேசிய ஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளியின் நிறுவனர்கள் திருமதி. ஹேமலதா முரளிதரன் மற்றும் திருமதி. அகிலா ரமேஷ், ‘’அக்கறையுடன் அணுக வேண்டிய மாற்றுத்திறன் கொண்ட சிறப்புக்குழந்தைகள் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஏற்றவகையில் கல்வி கற்பிக்கவேண்டும் என்ற பேரார்வத்தின் காரணமாக நாங்கள் ஆர்கேடியா என்ஐஒஎஸ் பள்ளியை ஆரம்பித்தோம். சிறப்புக்கவனிப்பு தேவைப்படுகிற குழந்தைகளுக்கு கல்வியை நிபுணத்துவடனும், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் வகையிலும் கல்வி கற்பித்து வருகிறோம். இதனால் அவர்களாலும் இந்த சமூகத்தை, உலகத்தை எதிர்கொண்டு மற்றவர்களைப் போல வெற்றிப்பெறமுடியும். கல்வித்துறையில் எங்களுக்கு இருக்கும் நீண்ட கால அனுபவத்தை கொண்டு எங்களது குழந்தைகளை அவர்களது எதிர்காலத்திற்கு தயார்படுத்துகிறோம்’’ என்றார்கள்.

      ஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளியை திருமதி. ஹேமலதா முரளிதரன் மற்றும் திருமதி. அகிலா ரமேஷ்  இருவரும் இணைந்து ஆரம்பித்தனர். கல்வித்துறையில் 40 ஆண்டுகால நீண்ட அனுபவம் கொண்டவர்கள். பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு கல்வியைக் கற்பித்து அவர்களை இந்த உலகை எதிர்க்கொள்ளும் ஆற்றலையும், நம்பிக்கையையும் உருவாக்கி வருகிறார்கள். சாதாரண குழந்தைகளைப் போல தினமும் பள்ளிக்கூடத்திற்கு வந்து கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாத, கல்வி கற்கும் திறன் குறைப்பாடு, சோஷியல்ஃபோபியா, டிஸ்லெக்‌ஷியா, ஹைபர் ஆக்ட்டிவிட்டி, நிலையான ஆளுமைத்திறன் இல்லாமை, உடல்நலக்குறைவு, ஆட்டிசம், விளையாட்டுகளில் கவனம் செலுத்த இயலாமை, எதையும் கற்றுக்கொள்ள அதிக நேரம் பிடித்தல் போன்ற குணாதிசயங்களைக் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்கு கல்வியை நிபுணத்துவடன் அளிப்பதில் ஆர்காடியா என்ஐஒஎஸ் தன்னை அர்ப்பணித்திருக்கிறது.  மேலும் என்ஐஒஎஸ் 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான ஆண்டுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தனித்தனியாக கவனம் செலுத்தி, அவர்களது விருப்பம் அறிந்து கல்வியை, எதிர்கால வாழ்க்கைகான அடித்தளத்தை அமைத்துகொடுக்கிறார்கள். ஆர்காடியா என்ஐஒஎஸ் பள்ளி, ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்கும் தனித்துவமான திறன் மற்றும் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கும் ஐஇபி எனப்படும் இண்டிவியூஅல் எஜூகேஷனல் ப்ளானை வடிவமைத்து இருக்கிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியோடு, விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நடவடிக்கைகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
Warm Regards 
D.G.JAISHANKAR
ADFACTORS PR
94440-36340

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *