Godrej Appliances sets new benchmark by launching India’s most eco- friendly AC with lowest Global Warming Potential

இந்தியாவிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த, புவி வெப்பமயமாதல் மிக மிக குறைந்த அளவே ஏற்படுத்தும் புதிய ரக  நவீன குளிரூட்டிகளை (AC) அறிமுகப்படுத்தி கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனம் புதிய தரநிலையை உருவாக்கியிருக்கிறது

  • 38-க்கும்  மேற்பட்ட வகைகளில் வரும் இந்த  புதிய ரக குளிரூட்டிகள் (Air Conditioners), ஆர்290 மற்றும் ஆர்32 என்ற குளிர்விப்பான்களை பயன்படுத்துகிறது. இவை புவி வெப்பமயமாதலை மற்ற குளிர்விப்பான்களை விட மிக மிக குறைந்த அளவே புவி வெப்பமயமாதலை உருவாக்கும் சிறப்புத்தன்மை கொண்டவை.
  • இதன்மூலம் உலகிலேயே  பசுமையான குளிர்விப்பானான ஆர்290-யை  பயன்படுத்தும்  இந்தியாவின் ஒரே ஏசி உற்பத்தியாளராக  உருவெடுத்துள்ளது கோத்ரேஜ் அப்ளையன்சஸ்
  • வரும் கோடைக்காலத்தில் குளிரூட்டிகள் பிரிவில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிக வளர்ச்சி என்ற இலக்கை  இந்நிறுவனம் குறிவைத்துள்ளது

சென்னை மார்ச் 6, 2019:  ‘சோச் கே பனாயா ஹை’ [மிகவும் யோசித்து உருவாக்கப்பட்டது] என்ற பிராண்ட் தத்துவத்துக்கு இணங்கவும், சுற்றுச்சூழல் சார்ந்த பிராண்டை உருவாக்கும் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும், இந்தியாவின் முன்னணி வீட்டு உபகரண தொழில் நிறுவனமான கோத்ரேஜ் அப்ளையன்சஸ், சுற்றுச்சுழலுக்கு உகந்த புதிய வகை குளிரூட்டிகளை  (ஏர் கண்டிஷனர்)  அறிமுகப்படுத்தி உள்ளது.  38-க்கும் மேற்பட்ட மாடல்களைக் கொண்ட இந்த குளிரூட்டிகள்,  புவி வெப்பமயமாதலின் பாதிப்புகளை பெருமளவில் குறைக்கும் ஆற்றல் வாய்ந்த  ஆர்290 மற்றும் ஆர்32 ஆகிய குளிர்விப்பான்களை ( refrigerants ) பயன்படுத்துகின்றன.

 NASA GISS வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 1880-ம் ஆண்டுமுதல் ஆண்டுக்கு 1.9F என்ற அளவில் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதில் இதுவரை அதிக வெப்பமானதாக கணக்கிடப்பட்டுள்ள 19 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் 2001-ம் ஆண்டுக்கு பிறகு மட்டுமே வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் என்பது அதற்கு முந்தைய ஆண்டைவிட கடுமையானதாகவே இருந்துள்ளது. கிரீன் ஹவுஸ் வாயுக்களின் (Green House Gases) வெளியீடு அதிகரித்து வருவதாலும், வளிமண்டலத்தில் அதிக வெப்பம் அப்படியே இருப்பதாலும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய பொருளாதாரம் வளர்ந்துவரும் நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் முக்கிய கேந்திரமாக இது இருந்து வருகிறது. காலநிலை மாற்றத்தில் புவி வெப்பமயமாதலின் பங்கை ஒதுக்கித் தள்ள முடியாது.          சுற்றுச்சூழலை காப்பதில் கோத்ரேஜ் பிராண்டின் அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் வகையில், கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனம் சுற்றுச்சூழலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத, அதே நேரத்தில் மிகச்சிறந்த குளிர்விக்கும் ஆற்றலுடன் கூடிய புதியரக குளிரூட்டிகளை  அறிமுகப்படுத்தி உள்ளது. ’பசுமையைக் காப்பது’ என்ற முக்கிய நோக்கத்தைக் கொண்ட இந்த புதிய நவீன குளிரூட்டிகள்,,  ஆர்290 மற்றும் ஆர்32 ஆகிய குளிர்விப்பான்களை (refrigerant) மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த இரண்டு குளிர்விப்பான்களும் ஓசோன் மண்டலத்தின் ஆற்றலில் சிறிதளவும் பாதிப்பை ஏற்படுத்தாத ‘ஜீரோ ஓசோன் டிப்ளீஷன் பொடென்ஷியல்- ஐ’ (‘Zero Ozone Depletion Potential – ODP) கொண்டுள்ளன.  சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களில்  இருந்து இந்த உலகையும் சுற்றுச்சூழலையும் காக்க இது துணை நிற்கிறது. அடுத்தபடியாக இந்த குளிர்விப்பான்கள், ஆர்290-க்கு 3 மற்றும் ஆர்32-க்கு 675 என்று மிகக்குறைந்த புவி வெப்பமயமாக்கல் வாய்ப்புகளையே   Global Warming Potential’ ) கொண்டுள்ளன. அதே நேரத்தில் மற்ற குளிர்விப்பான்கள் 1810-க்கும் அதிகமான [GWP] க்ரீன் ஹவுஸ் வாயுக்களை கொண்டுள்ளன.

கோத்ரேஜ் குளிரூட்டிகளின் பரவலான இந்த வகைகள், சக்திவாய்ந்த குளிர்ச்சியை வழங்குவதற்கான பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. மிகத்துல்லியமான குளிர்ச்சியை வழங்குவதற்கான இன்வெர்ட்டர் தொழில்நுட்பம், மிகச்சிறந்த செயல்பாட்டுக்காக இரட்டை ரோட்டரி கம்ப்ரஸர், எளிதில் பராமரிக்க உதவும் ஸ்மார்ட் ஐஓடி, பிரச்சினையில்லாமல் செயல்படுவதற்காக கண்டென்சர்கள் மற்றும் எவாப்பிரேட்டர்களில் துருப்பிடிக்காத  நீலம் மற்றும் தங்க நிறப் பூச்சு, அமைதியான செயல்பாட்டுக்காக பல அடுக்கு அகோஸ்டிக் ஜாக்ட், ஆக்டிவ் கார்பன், பாக்டீரியாக்கள் மற்றும் தூசுகளைத் தடுக்கும் வடிகட்டிகள், நாம் விரும்பிய இடத்தில் குளிர்சாதனப் பெட்டியை பொருத்த 30 மீட்டர் நீள பைப்பிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்  இதில் உள்ளன.  இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த குளிரூட்டிகள் மிகச்சிறந்த  அனுபவத்தை வழங்கும். கோத்ரேஜ் ஏசிக்களின் இன்வெர்டர் கம்ப்ரசர்களுக்கு 10 ஆண்டு வாரண்டியும், மற்ற கம்ப்ரஸர்களுக்கு 5 ஆண்டு வாரண்டியும் வழங்கப்படுகிறது. மேலும்  ஆர்290 குளிர்விப்பானுடன் வரும் குளிரூட்டிகளின் கண்டென்சர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட  சீசனில் தங்கள் சலுகையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஸ்பிளிட் ஏசிக்களை வாங்கும் தினத்தன்றே அவை பொருத்தி தரப்படும். மேலும் அதைப் பொருத்துவதற்கு ரூ.499 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். தாமிரத்தாலான கண்டென்சர்களைக்  கொண்ட ஏசிக்கள் ஒவ்வொன்றுக்கும் 5 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும்   ஏசியை வாங்க தேவையான நிதியுதவியும் செய்யப்படுகிறது.

இந்த புதிய குளிரூட்டிகளை அறிமுகப்படுத்தி பேசிய கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான திரு.கமல் நந்தி (Mr. Kamal Nandi, Business Head and Executive Vice President Godrej Appliances), “’பிரகாசமான, மகிழ்ச்சியான வாழ்க்கை’ என்ற எங்கள் வாக்குறுதிக்கு உண்மையாக இருக்கும் வண்ணம் பசுமையான தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை  எங்கள் பங்குதாரர்களுக்கு வழங்கி வருகிறோம். அதேநேரம்,  அத்துடன் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான தங்களின் அர்ப்பணிப்பிலும் கோத்ரேஜ் நிறுவனம், உறுதியாக உள்ளது.  சுற்றுச்சூழலலுக்கு சாதகமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக தனித்துவம் பெற்றிருக்கும் நிலையில், உலகின் சிறந்த பசுமை குளிர்விப்பானாகிய ஆர்290 [world’s greenest refrigerant – R290] -யை வீடுகளுக்கான குளிரூட்டிகளில்   கோத்ரேஜ் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.   ஆர்290-யைக் கொண்டு குளிரூட்டிகளைத்  தயாரிப்பது, பொருத்துவது, சர்வீசிங் செய்வது ஆகியவற்றில் இந்நிறுவனம் பெற்றுள்ள நிபுணத்துவம் ஐக்கிய நாடுகளின் யுஎன்இபியால் (UNEP) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ள ஒரு பொறுப்பான நிறுவனம் என்ற முறையில் ஒவ்வொரு ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டைவிட சிறப்பாக செயல்பட இந்நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 0 ஓடிபி மற்றும் குறைந்த GWP-யுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரக குளிரூட்டிகள்  உங்களையும் இந்த உலகையும் குளிர்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

கோத்ரேஜ் அப்ளையன்சஸ்  நிறுவனத்தின் ப்ராடெக்ட் குரூப் ஹெட்டான திரு.சந்தோஷ் சாலியன் (Mr. Santosh Salian, Product Group Head, Godrej Appliances) இதுபற்றி மேலும் கூறும்போது, “குளிரூட்டிகள் போன்ற உபகரணங்கள் கிரீன் ஹவுஸ்  வாயுக்களை (Green House Gases)  வெளியிடும். இதனால் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகள் அதிகமாகும். நாட்டின் நிலைத்தன்மை இலக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, நாங்கள் புவி வெப்பமயமாதலை குறைக்கும் வகையிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த 38 புதிய மாடல் கோத்ரேஜ் ஏசிக்களை  அறிமுகப்படுத்துகிறோம். இந்த புதிய வகை ஏசிக்கள் உலகின் அதிக பசுமையான, சுற்றுச்சூழலகுக்கு அதிக கேடு விளைவிக்காத ஆர்32வுடன் கூடிய ஆர்290 குளிர்விப்பான்களைக் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த குளிரூட்டிகள்  ஓசோனை பாதிக்காது என்பதுடன் மிகக்குறைந்த அளவிலேயே புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும். உதாரணமாக 1810   GWP-யுடன் கூடிய  ஆர்22 குளிர்விப்பான்களைக் கொண்ட குளிரூட்டிகள்  ஓராண்டில் வெளியிடும்  கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை ஈடுசெய்ய 49 மரங்கள் தேவைப்படும். அதே நேரத்தில் ஆர்290 குளிர்விப்பான்களை கொண்ட 5 நட்சத்திர குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியிடப்படும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை ஈடுசெய்ய அதைவிட 29 மரங்கள் குறைவாகவே தேவைப்படும். கிரீன் இன்வெர்டர் தொழில்நுட்பம், துருப்பிடித்தலுக்கு எதிரான புளூ பின்  பாதுகாப்பு, ஸ்மார்ட் ஐஓடி, இரட்டை மோட்டார் கொண்ட கம்ப்ரஸர் போன்ற பல்வேறு புதிய அம்சங்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்ட இந்த குளிரூட்டிகள்,  சக்திவாய்ந்த குளிரூட்டும் தன்மை, மின் சேமிப்பு மற்றும் புவி வெப்பமயமாக்கலை தடுக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வகைகளில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை 5-ஸ்டார் பிரிவில் வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த குளிரூட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும்” என்றார்.

                    கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தென் மண்டல வர்த்தக தலைவரான திரு.ஜுனைத் பாபு (Mr. Junaith Babu, Zonal Business Head South, Godrej Appliances) கூறும்போது, “சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த குளிரூட்டிகள், அனைத்து முன்னணி உபகரணங்களை விற்கும் கடைகளிலும் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலமானது அதிக கடுமையுடன் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். வரவிருக்கும் கோடைக்காலமும் இதிலிருந்து மாறுபடப் போவதில்லை. கடந்த ஆண்டில் ஏசி துறையின் வளர்ச்சி சற்று தேக்கத்தைக் கண்டிருந்த போதிலும்,  இந்த ஆண்டில் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் ஏசிக்கான தேவை அதிகரிக்கும் என்றும்  நாங்கள் நம்புகிறோம். 38 புதிய மாடல் குளிரூட்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்களை வலுப்படுத்திக்கொண்டு இந்த நிதியாண்டில் 20 சதவீதம் வளர்ச்சி அடைய முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.

 குளிரூட்டிகளைப் பொறுத்தவரை அதற்கான சர்வீஸ்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கோத்ரேஜ் உபகரணங்களின் சர்வீஸ் பிராண்டான கோத்ரேஜ் ஸ்மார்ட்கேர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 660 சர்வீஸ் மையங்கள் மற்றும் 2,500 சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட கோத்ரேஜ் ஸ்மார்ட்கேர், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த சர்வீஸ் மையங்களுக்கான செயலி மூலம் உங்களுக்கான சேவை எந்த நிலையில் உள்ளது என்பதை நாள்தோறும்  24 மணிநேரமும் கண்காணிக்க முடியும். மேலும் இதற்கு 12 மொழிகளில் தொடர்புகொள்ள வசதியுள்ள கால் சென்டர்களும் உள்ளன. வாடிக்கையாளர்களை எளிதில் அணுகுவதற்காக 160 ஸ்மார்ட்மொபைல் வேன்களும் உள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை மதிப்பிட சிஎஸ்என் (Complete Satisfaction Number) என்ற எண்ணும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சேவைக்கான மதிப்பீடை வழங்கலாம்.   கடுமையான கோடையை சமாளிக்க வேகமாக குளிரூட்டிகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் அவசரத்தைப் புரிந்துகொண்டு, முக்கிய நகரங்களில் ஏசியை வாங்கிய அதே நாளிலேயே வாடிக்கையாளர்களின் வீடுகளில் பொருத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை கோத்ரேஜ் ஏசிக்கள், இன்வெர்டர் மற்றும் பிக்ஸட் ஸ்பீட் டெக்னாலஜி, ஸ்பிளிட் மற்றும் விண்டோ, மின் சேமிப்பில் 5 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார்கள் என பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.  1 டிஆர் (~3514 வாட்ஸ்),  1.5 டிஆர்(~5271) மற்றும்  2டிஆர்  (~7028) வகைகளில் உள்ள இந்த குளிரூட்டிகளின் விலை ரூ.27,900 -ல் தொடங்கி ரூ.73,000 வரை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *