முதலமைச்சருக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ விருது

முதலமைச்சருக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ விருது… கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம்

அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி அமைப்பு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் ஃபெல்லோ விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு கட்சியினர் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர். மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் என அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நாளிதழ்களில் விளம்பரங்கள் அளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அமெரிக்க அமைப்பின் விருதை பெற்றமைக்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழாவே நடைபெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *